கன்னியாகுமரி மாவட்டத்தில் வாறுதட்டு பகுதியில் செயல்பட்டு வருகின்ற வாறுறதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை யின் ஆண்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நாகர்கோவில் கஸ்தூரிபா மாதர் சங்க அரங்கில் வைத்து அன்னை தெரசா அறக்கட் டளையின் தலைவர் என்.எம்.பிரேம்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி விருதுகளை வழங்கினர். கலை ஆர்வலர் பா.ஜோணி அமிர்த ஜோஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.மாநில, தேசிய அளவிலும் பாட்மிண்டன் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த நாராயணன் நாயருக்கு சாதனைகளின் சிகரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலுமிருந்தும் சமூக சேவகர்கள், குருதிக் கொடையார்கள், ஊடகத் துறையினர், கலைஞர்கள், ஆசிரியர்கள் என சுமார் நூறுக்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் மற்றும் விருது சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.