கன்னியாகுமரி மாவட்டம் கட்டி மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (48) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இன்று காலையில் பூதப்பாண்டி அருகேயுள்ள அம்பட்டை யான் கோணம் பகுதியில்ஒரு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து மதியம் சுமார் 3.00 மணியளவில் தனது வீட்டிற்க்கு அவரது காரை ஓட்டி கொண்டு சென்றுள்ளார். அப்போது பூதப்பாண்டியை அடுத்துள்ள நாவல்காடு அருகே வரும் போது அவரது கார் கட்டுபாட்டை இழந்து சாலையோர முள்ள அரசியல் கால்வாயில் கவிழ்ந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் கால்வாய்க்குள் இறங்கி கவிழ்ந்து கிடந்த காரை சரி செய்து காரின் கதவை உடைத்து கிறிஸ்டோபரை வெளியே எடுத்து 108 ஆம்புலன்சிற்க்கு தகவல் தெரிவித்தனர்கள். அவர்கள் சம்பவ இடம் வந்து அவரை பரிசோதித்து பார்க்கும் போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர் இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.