அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை இணைந்து நடத்திய 4-வது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் எம் பி ஞான திரவியம் பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற எஸ். ஆர். எம் பல்கலைக்கழக அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் பரிசு கோப்பை,யும் வழங்கினார். தொடர்ந்து இரண்டாம் பரிசு பெற்ற தென்னக ரயில்வே அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை யும்,மூன்றாம் பரிசு பெற்ற. மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் கேரளா அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை,யும்.நான்காம் பரிசு பெற்ற சென்னை டாக்டர் சிவந்திஆதித்தனார் கல்லூரி அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது . ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற சென்னை இந்தியன் வங்கி அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் பரிசு கோப்பை,யும்,இரண்டாம் பரிசு பெற்ற எஸ். ஆர். எம். பல்கலை கழக அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை யும்,மூன்றாம் பரிசு பெற்ற. சென்னை வருமான வரித்துறை அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை,யும்.நான்காம் பரிசு பெற்ற. சுங்க த்துறை அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. .மேலும் சிறந்த ஆட்டக்காரர்களுக்கான பரிசும்வழங்கப்பட்டது.