தி மு க நிர்வாகிகளுடன் கனிமொழி எம்.பி சந்திப்பு

நாகர்கோவில்;

Update: 2025-05-18 14:58 GMT
தி மு க எம்.பி கனிமொழி இன்று குமரி மாவட்டம் வருகை தந்தார். தொடர்ந்து நாகர்கோவிலில் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசினார். அவர் கூறியதாவது:- சிலர் தமிழ்நாட்டில் புதிய பலம் வாய்ந்த இடத்தை பிடித்து விடலாம் என்று திடீரென அரசியலுக்குள் நுழையக்கூடியவர்கள் யாருக்காக இந்த தேர்தலில் காலடி எடுத்து வைக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். பிஜேபிக்கு எதிராக பேசுவது போல் பேசுவார்கள். ஆனால் பிஜேபிக்கு எதிராக இருக்கக்கூடிய வாக்குகளை திசை திருப்பக் கூடிய ஒரு வியூகம் என்று அதை நாம் புரிந்து கொண்டு இந்த தேர்தலில் பணியாற்ற வேண்டும். மேலும் நமக்குள் இருக்கும் பிரச்சனைகளை மனமாற்றங்களை தேர்தல் வரை தள்ளி வைக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை என நாம் புரிந்து செயல்பட வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன்,மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News