அரியலூரில் திமுக ஆலோசனை கூட்டம்

அரியலூரில் திமுக ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் கட்சி முதன்மைச் செயலாளர் கே என்.நேரு தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-05-18 19:13 GMT
அரியலூர்,மே.19- அரியலூரில்,கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆலோசனையின்படி, மாவட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கழக செயலாளர்,மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றதில்,கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கழக நிர்வாகிகளும் ஒருங்கிணைத்து தேர்தல் பணி மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். குறிப்பாக கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்வது - நம் தலைவர் அறுவுறுத்திய மக்கள் நல பணிகளை மேற்கொள்வது - கழகத்தின் ஒவ்வொரு அணி சார்பிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் விளக்கமாக கேட்டறிந்தார்கள். மேலும்,நம் தலைவர் அவர்கள் தலைமையிலான அரசு மீண்டும் அமைய ஒவ்வொருவரும் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில்,சட்ட திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோருடன் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாநில - மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Similar News