வாரச்சந்தைக் முன்பு ஆட்டோவை மரித்து போடப்பட்ட பழக்கடைகளால் ஆட்டோ ஆட்டோ தொழிலை பாதித்ததால் ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு.

ஜெயங்கொண்டம் வாரச்சந்தை முன்பு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையூறாக உள்ள தரைக்கடை (பழக்கடைகளை) அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் செல்லும் சாலையில் போக்குவர;

Update: 2025-05-19 08:30 GMT
அரியலூர், மே,19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழைய மீன் மார்க்கெட்டில் (கோடா புள்ளை குட்டை) நகராட்சி கட்டுப்பாட்டில் தற்காலிக இடத்தில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தை அருகே டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரச்சந்தை முன்பு வழக்கமாக ஆட்டோ நிறுத்தப்படும் இடத்தின் முன்பாக தரைக்கடை பழவியாபாரிகள் சிலர் ஆட்டோக்கள் சவாரி எடுத்து செல்ல முடியாத நிலையில் கடை போட்டு நடத்தி வந்தனர். இதனால் சவாரி செல்ல முடியாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக கூறி இது குறித்து நகராட்சியிடம் புகார் தெரிவித்தும்  உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்து ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வாரச்சந்தை முன்பு முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இது பற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ஆட்டோ ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.தொடர்ந்து அங்கிருந்த பழக்கடை வியாபாரிகளை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News