குமரியில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி உள்ளது. நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவியின் மேல் பகுதியில் உள்ள உல்லாச படகு சவாரி பகுதியிலிருந்து அருவிக்கு தண்ணீர் செல்லும் மடைப்பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கிறது. சுற்றுலா பயணிகள் பயன்படுத்திவிட்டுப் போடும் தண்ணீர் பாட்டில்கள், கப்பு உள்ளிட்டவை தண்ணீர் வந்து ஓரிடத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் அருவிக்கு செல்லும் தண்ணீர் மாசுடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சுற்றுலா பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இது ஒரு புறம் இருக்க அருவியில் சிறுவர் விளையாடும் பூங்காக்களிலும் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.