சூலூர்: ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் !

கோவை மாவட்டம் சூலூரில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் தீங்கு விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரம் இன்று நடைபெற்றது.;

Update: 2025-05-19 12:47 GMT
கோவை மாவட்டம் சூலூரில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் தீங்கு விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரம் இன்று நடைபெற்றது. பசுமை அமைப்புகள் இணைந்து சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடத்திய இந்த கூட்டத்தில், நெகிழியின் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கான பாதிப்புகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. மேலும், அன்றாட வாழ்வில் நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான மாற்று வழிகள் மற்றும் நெகிழி இல்லா வாழ்க்கை முறையை பின்பற்றுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நெகிழி பயன்பாட்டிற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், பல்வேறு பசுமை அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் சூலூர், பல்லடம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பசுமை நிழல் அமைப்பைச் சேர்ந்த விஜயகுமார் கூறுகையில், அரசு நெகிழிப் பைகளின் பயன்பாட்டை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். பொதுமக்களும் நெகிழிப் பொருட்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும், என்று வலியுறுத்தினார்.

Similar News