மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர் தங்கப்பதக்கம்

திருச்சியில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.;

Update: 2025-05-19 15:08 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திபுரம் பகுதியில் வசிப்பவர் உதயகுமார், பூங்கொடி தம்பதியர். இவர்களின் மகன் இன்பா உதயகுமார், 7. திருச்சியில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமிட்டே பிரிவில், பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடந்தன. இதில் 7 வயது பிரிவின் கீழ் பங்கேற்ற இன்பா உதயகுமார்,  தங்கப்பதக்கம் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவரை பயிற்சியாளர்கள் கவுதம் ரகுநாதன், கவின் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள்.

Similar News