வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை!

போலீஸ் எஸ்.பி. மதிவாணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.;

Update: 2025-05-19 16:52 GMT
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி. மதிவாணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒருவர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News