வெட்டுவானம் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா!
பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தது.;
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு, கெங்கையம்மன் சிரசு தாரை தப்பட்டை, சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கெங்கையம்மன் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.