அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு பாராட்டு!
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் கழக தலைவர் பொன்னாடை போர்த்தினர்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் கழக தலைவர் பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கௌரவித்தனர். இதில், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.