எள் வயலில் தேங்கிய நீரால் பயிர் அழுகி வருவதால் விவசாயிகள் பாதிப்பு 

எள் வயலில் தேங்கிய நீரால் பயிர் அழுகி வருவதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ;

Update: 2025-05-20 02:16 GMT
அரியலூர், மே.20- அரியலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக எள் வயலில் தேங்கிய நீரால் பயிர் அழுகி வருவதால் விவசாயிகள் பாதிப்பு - உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியான திருமானூரில் சம்பா சாகுபடி அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் எண்ணெய் வித்து பயிரான எள் பயிரை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர் திருமானூர் ஒன்றியத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் என் பயிரானது சாகுபடி செய்யப்பட்டுள்ளது நல்ல விளைச்சலுடன் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள போது கடந்த மூன்று நாட்களாக திருமானூர் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவிலான எள் வயல்களில் மழை நீர் தேங்கி உள்ளது மேலும் நீர் தொடர்ந்து தேங்கி இருப்பதால் எள் பயிர்கள் அழுகியும் வருகிறது மேலும் எள் அறுவடை செய்துள்ள விவசாயிகள் எள் பயிரை உலர்த்த முடியாமல் உள்ளதால் கைக்கு வந்த மகசூல் காசாக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் மேலும் தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் தேங்கிய நீரும் வடியாமல் வயலிலேயே தேங்கி காணப்படுகிறது இதனால் எள் மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் மேலும் ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 15,000 வரை செலவு செய்துள்ள நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாவட்ட வேளாண்மை துறை  பாதிக்கப்பட்ட எள் வயல்களை அளவீடு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News