தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

நாகர்கோவில்;

Update: 2025-05-20 02:49 GMT
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில் மாநகர் நல அதிகாரி டாக்டர் ஆல்பர் மதியரசு தலைமையில் சுகாதார அலுவலர்கள் முருகன், ராஜா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தமிழக அரசு ஒருமுறை பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த தடை விதித்துள்ளதை செயல்படுத்தும் விதமாக அண்ணா பஸ் நிலையம், கோட்டார் பகுதிகளில் நேற்று காலை முதல் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையானது அப்பகுதியில் உள்ள 52 கடைகளில் நடைபெற்றது இதில் 15 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த கடைகளில் இருந்த 825 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்யப்பட்டு அந்தக் கடைகளுக்கு 51000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்தாலோ பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Similar News