கோவை: மதுக்கரை பகுதியில் நாளை மின் நிறுத்தம் !
கோவையை அடுத்த மதுக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மதுக்கரை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அருள்குமார் தெரிவித்துள்ளார்.;
கோவையை அடுத்த மதுக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மதுக்கரை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அருள்குமார் இன்று தெரிவித்துள்ளார். அதன்படி கே.ஜி.சாவடி, பாலத்துறை, பைபாஸ்ரோடு, சாவடிப்புதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.நகர், சுகுணாபுரம், பி.கே.புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், மற்றும் கோவைப்புதூர் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும். அதனால் பொதுமக்கள் தங்களுடைய அன்றாடம் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.