மூன்று கிராமங்களில் புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு
மூன்று கிராமங்களில் புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டது.;
அரியலூர்,மே 20- அரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளம், ஓட்டக்கோவில், விழுப்பணங்குறிச்சி ஆகிய கிராமங்களில் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேற்கண்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா,புதிய நியாய விலைக் கட்டடங்களை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு அத்தியவாசியப் பொருள்களை வழங்கி பேசினார். விழாவில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் சாய்நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.