வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது.
மதுரை அனுப்பானடி பகுதியில் டிரைவரிடம் வழிப்பறி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.;
மதுரை அனுப்பானடி பூக்கார தெரு பகலவன் நகரைச் சேர்ந்த கண்ணன்(57) என்ற டிரைவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் மந்திரமூர்த்தி(31) என்ற வாலிபர் அவரை மிரட்டி பணம் கேட்க கொடுக்க மறுத்ததால் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.300 பணத்தை பறித்து தப்பியோடிவிட்டார். இதனை விசாரித்த தெப்பக்குளம் போலீசார் மந்திர மூர்த்தியை கைது செய்தனர்.