கோவில் திருப்பணி பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கிய அமைச்சர்.

மதுரை அருகே கோவில் திருபணிகளை செய்து வருபவர்களுக்கு மதிய உணவினை அமைச்சர் வழங்கினார்.;

Update: 2025-05-20 15:51 GMT
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தமது தாயாருமான திருமதி ருக்மணி பழனிவேல் ராஜன் அவர்களுடன் மதுரை செங்குளம் பண்ணை பகுதியில், அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் வீர வசந்தராயர் மண்டபத்திற்கான திருப்பணிகளை மேற்கொண்டுவரும் பணியாளர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார்கள்.

Similar News