கோவை: கூடுதல் கலெக்டர் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஆய்வு !

கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வதம்பச்சேரி, வாரப்பட்டி, எஸ். குமாரபாளையம், மற்றும் இடையர்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று ஆய்வு செய்தார்.;

Update: 2025-05-21 08:22 GMT
கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வதம்பச்சேரி, வாரப்பட்டி, எஸ். குமாரபாளையம், மற்றும் இடையர்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று ஆய்வு செய்தார். அவர் கலைஞர் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுதுபார்ப்புத் திட்டம், தூய்மை பாரதத் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சித் திட்டம், மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெறும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், குறித்த காலத்திலும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, சுல்தான்பேட்டை வட்டார ஆணையாளர் சிக்கந்தர் பாட்ஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியப் பொறியாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள் உட்படப் பலர் உடனிருந்தனர்.

Similar News