கோவை: தோழி பணிபுரியும் மகளிர் விடுதி -புதிய மைல்கல்

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், கோயம்புத்தூர் விளாங்குறிச்சியில் ரூ.15.95 கோடி மதிப்பீட்டில் 200 படுக்கைகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தோழி பணிபுரியும் மகளிர் விடுதி அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.;

Update: 2025-05-21 08:53 GMT
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், கோயம்புத்தூர் விளாங்குறிச்சியில் ரூ.15.95 கோடி மதிப்பீட்டில் 200 படுக்கைகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தோழி பணிபுரியும் மகளிர் விடுதி அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இந்த அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்தார். மகளிர் நலனைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விடுதி அமைக்கப்படுகிறது. இது பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட தங்குமிட வசதிகளை வழங்கும். கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் - அலுவலர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News