விக்கிரவாண்டி பேருராட்சியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்;

Update: 2025-05-21 14:29 GMT
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு, வட்டாரதலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் கண்டன உரையாற்றினார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எழுத்தர் சேகர், கலைவாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கணினி உதவியாளர் கீதா நன்றி கூறினார்.

Similar News