கார் மோதியதில் பெண் பலி
மதுரை மேலூரில் டூவீலர் மீது கார் மோதியதில் பெண் பலியான சம்பவம் நடந்துள்ளது.;
மதுரை மாவட்டம் மேலுார் தாமரைப்பட்டியை சேர்ந்த ராஜேஷ் (22) என்பவர் குடும்பத்தினருடன் மேலுார் ஜோதி நகரில் வசித்து வருகிறார்.இவர் நேற்று (மே.21) மாலை தாமரைப்பட்டியில் உள்ள வயலுக்கு தனது அம்மா பஞ்சுவை( 47) அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில் மதுரையில் இருந்து சென்னை சென்ற கார் இவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் மோதியதில் பஞ்சு உயிரிழந்தார். மேலும் ராஜேஷ் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.