ஒரு கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
மதுரை அவனியாபுரம் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.;
மதுரை மதுவிலக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துமணிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப் படையில் அவனியாபுரம் வள்ளலானந்தபுரம் சந் திப்பு அருகே ரகசிய கண் காணிப்பில் ஈடுபட்டபோது அங்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வல்லலானந்தபுரம் அய்யனார் கோவில் தெரு தங்கம் , மற்றும் அதே பகுதி ஆஞ்சநே யர்கோவில் தெரு அசோக் குமார் என்றும் தெரியவந்தது. அவர்களிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது அதனை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தார்.