தென்காசியில் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்பு
பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்பு;
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தென்காசியில் காங்கிரஸ் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்றனா். காந்தி சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி படத்துக்கு மலா் தூவி படத்திற்கு அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ப. சட்டநாதன், நிா்வாகிகள் ஈஸ்வரன், பெருமாள், ஜேம்ஸ், செங்கை கண்ணன், மாநில வா்த்தக காங்கிரஸ் துணைத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.