புதிய நியாய விலை கடைகளை திறந்து வைத்த எம்எல்ஏ
மதுரையில் புதிய நியாய விலை கடைகளை தளபதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.;
மதுரை நகரில் வார்டு எண் 35 அண்ணாநகர் வடக்கு 9வது குறுக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு நியாயவிலைக் கடை கட்டிடங்களை இன்று (மே.22) வடக்கு தொகுதி எம்எல்ஏ தளபதி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.