கோவை: வாட்ஸ்அப் குழுவில் சர்ச்சைக்குரிய கருத்து- கைது

சர்ச்சைக்குரிய கருத்தை whatsapp குழுவில் பகிர்ந்த சரண் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-05-22 10:21 GMT
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த சரண் (20), கோவை மதுக்கரை அருகே உள்ள ஏழூர் பிரிவில் தங்கி, பேக்கரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அண்மையில் வாட்ஸ்அப் குழுக்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்து கைதாகியுள்ளார். கடந்த ஆண்டில் கொலை செய்யப்பட்ட ஒரு நபரின் புகைப்படத்தை வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டு, "பழிக்குப்பழி தொடரும்" என்று ஆடியோவையும் சேர்த்து சரண் அனுப்பியுள்ளார். மேலும், சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பல வாட்ஸ்அப் குழுக்களுக்குப் பகிர்ந்துள்ளார். இது குறித்து மதுக்கரை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரண் நெல்லையைச் சேர்ந்த நபர்கள் அடங்கிய குழுக்கள் உட்பட பல்வேறு குழுக்களுக்கு இந்தக் கருத்துக்களைப் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரணை கைது செய்தனர்.

Similar News