மணல் கடத்திய இருவர் கைது.
மதுரை பேரையூர் அருகே மணல் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.;
மாவட்டம் பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் ஓடையில் டிராக்டரில் மணல் திருடுவதாக சாப்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது மணல் கடத்தி கொண்டிருந்த அணைக்கரைப்பட்டி ஜெயராமன் (26)சதீஷ் (22 )ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களது டிராக்டரை பறிமுதல் செய்தனர்.அங்கிருந்து தப்பி ஓடிய வி.ராமசாமிபுரம் ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்