திருமங்கலம் அருகே பிளஸ் டூ மாணவி மாயம்
மதுரை திருமங்கலம் அருகே பிளஸ் டூ மாணவி மாயம் என அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பழைய நெடுங்குளம் பகுதியில் வசிக்கும் பாண்டி என்பவரின் 17 வயது மகள் தற்போது பிளஸ் டூ படித்து முடித்து இருக்கிறார். இவர் தன் படித்த பள்ளிக்கு செல்வதாக நேற்று முன்தினம் (மே.21) கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தாயார் அழகுமணி நேற்று (மே.22) கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.