கோவை: விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல் !

கோவை சர்வதேச விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2025-05-23 06:42 GMT
கோவை சர்வதேச விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சித்ராவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. இங்கு தங்கம், போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் வகையில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். இன்று சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஒரு பயணியிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News