கோவையில் கோடை வெயிலுக்கு குட்பை சொல்லும் சாரல் மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி !
கோவையில் காலை முதலே வெயில் வாட்டிய நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது.;
கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தை வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கம், கோவை மாவட்டத்திலும் கடுமையாக இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் முதலே கோவையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று கோவை நகரின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பந்தய சாலை, சிவானந்தா காலனி ரயில் நிலையம், சுங்கம், அண்ணா சாலை, புலியகுளம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கோவையில் குளிர்ந்த சூழல் நிலவி வருவதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மதிய வேளையில் கோடை வெப்பத்தில் தவித்த மக்களுக்கு இந்த மழை ஒரு நல்ல குளிர்ச்சியான சூழலை கொடுத்துள்ளது.