தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்!
தூய்மை பணியாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை பெறுவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை பெறுவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள சண்முகனடியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, மாநகர நல அலுவலர் பிரதாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இதில் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.