கோவை: மக்கள் விரோத தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக திராவிட இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-05-24 03:12 GMT
பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த தமிழக அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், அத்தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய மக்கள் விரோத தீர்ப்பைக் கண்டித்து, திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவையினர், திருநெல்வேலியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், தொழிலாளர் நியமனத்தில் தமிழ்நாடு அரசுக்கு உள்ள உரிமையை மறுக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர். இத்தீர்ப்பை திராவிட இயக்க தமிழர் பேரவை உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது மக்கள் விரோத தீர்ப்பு, அரசியல் சாசனத்திற்கு எதிரான தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் தீர்ப்பு என்றும் கூறினர். மேலும், இத்தீர்ப்பை வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வின் நீதிபதிகளான சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாதன் ஆகியோரை குடியரசு தலைவரும் உச்ச நீதிமன்றமும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Similar News