குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு முதல் குளிக்க தடை

அருவியில் நேற்று இரவு முதல் குளிக்க தடை;

Update: 2025-05-24 03:34 GMT
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News