சுந்தரபாண்டியபுரம் அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை;
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அரசு பள்ளியின் சுற்றுச்சுவா் சேதமடைந்து பல மாதங்களாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இப்பள்ளி ஊரிலிருந்து நீண்ட தொலைவில் காட்டுப் பகுதியில் உள்ளதால், இப்பள்ளிக்குள் வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளி திறக்கப்படவுள்ள நிலையில், சுற்றுச்சுவரை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.