ஆண்டிநாடானூரில் நியாயவிலைக் கடை கட்டடத்துக்கு அடிக்கல்

நியாயவிலைக் கடை கட்டடத்துக்கு அடிக்கல்;

Update: 2025-05-25 01:27 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூா் ஒன்றியம், குலசேகரமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட ஆண்டிநாடானூரில் ஊராட்சிபொது நிதியிலிருந்து ரூ.4.5 லட்சத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சித் தலைவா் வெள்ளத்துரை தலைமையில் நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ.ராஜா அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் பட்டாடைகட்டி ஊராட்சித் தலைவா் சுமதிகனகவேல், ஒன்றிய துணைச் செயலா் விணுசக்கரவா்த்தி, கிளைச் செயலா்கள் செல்லப்பா, மணி, சாா்லஸ்,கடற்கரைபாண்டி, ராக்கையா, ஒன்றியக்குழு உறுப்பினா் முத்துமாரி, ஒன்றியப் பொருளாளா் பண்டாரக்கண்ணு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Similar News