குண்டத்தில் பாஜக சார்பில் ஆப்ரேசன் சிந்தூர் வெற்றிப் பேரணி

குண்டத்தில் பாஜக சார்பில் ஆப்ரேசன் சிந்தூர் வெற்றிப் பேரணி . பொடரன் பாளையம் முதல் குண்டடம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.;

Update: 2025-05-25 13:37 GMT
திருப்பூர் தெற்கு மாவட்ட குண்டடம் (கிழக்கு) ஒன்றியம் தலைவர் திருவெங்கடாசலம் அவர்கள் தலைமையில் ஆப்ரேசன் சிந்தூர் வெற்றிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், நமது இந்திய ராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சி குண்டடம் கிழக்கு ஒன்றியம் சார்பில் தேசிய கொடி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது பொடரன் பாளையம் முதல் குண்டடம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இந்த பேரணியை மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ருத்ரகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இளைஞர் அணி மாநில செயலாளர் யோகிஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ருத்ராவதி பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் , முன்னாள் ஒன்றிய தலைவர் திருமலைசாமி, ஸ்ரீராம் ,ஐயப்பன் உட்பட பாஜக நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் மற்றும் தேச பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News