நடு ரோட்டில் பயணிகளை இறக்கி விடும் அரசு பேருந்துகளால் போக்குவரத்து பாதிப்பு
குமாரபாளையத்தில் நடு ரோட்டில் பயணிகளை இறக்கி விடும் அரசு பேருந்துகளால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.;
குமாரபாளையம் நகரில் பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ராஜம் தியேட்டர், ஆனங்கூர் பிரிவு சாலை, பள்ளிபாளையம் பிரிவு சாலை, உள்ளிட்ட பல முக்கிய நிறுத்தங்களில், பயணிகளை, சாலையின் நடு பகுதியில் இறக்கி விடுகின்றனர்., இதனால் பின்னால் வரும் டூவீலர்களால் விபத்து ஏற்பட்டு பயணிகள் காயமடையும் நிலை ஏற்படுகிறது. மேலும், பேருந்தின் பின்னால் வருகிற இதர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல், காத்திருக்கும் நிலை ஏற்பட்டு, போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இது போன்று நடு ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஓட்டுனர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலையை மாற்ற வேண்டும், என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.