நண்பரின் செல்போன் பணத்தை திருடிய நபர் கைது

மது போதையில் ஒன்றாக தூங்கிய போது நண்பரின் செல்போன் பணத்தை திருடிய நபர் கைது;

Update: 2025-05-25 19:19 GMT
மது போதையில் ஒன்றாக தூங்கிய போது நண்பரின் செல்போன் பணத்தை திருடிய நபர் கைது நொளம்பூர் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மது குடித்துவிட்டு உடன் தூங்கிய நண்பரின் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற நபர் கைது செய்யப்பட்டார். சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் வேலூரை சேர்ந்த அவினாஷ் (25) என்ற இளைஞர் கடந்த இரண்டு மாதங்களாக வீடு ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அவினாஷ் ஊரை சேர்ந்த சீனிவாசன் (49) என்பவரும் உடன் தங்கி பணியாற்றி வருகிறார். முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்தில் ஒன்றாக சேர்ந்து மது அருந்திவிட்டு உறங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த போது அவினாஷ் செல்போன் மற்றும் ரூபாய் 500 பணத்தை காணவில்லை. இது தொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்டது அவினாஷுடன் தங்கி இருந்த நண்பர் சீனிவாசன் தான் என்பதை கண்டறிந்தனர். அவரை கைது செய்த போலீசார் செல்போனை மீட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News