சங்கரன்கோவிலில் அருகே அறிவாளால் வெட்டியதில் தந்தை உயிரிழப்பு , மகன் கைது
அறிவாளால் வெட்டியதில் தந்தை உயிரிழப்பு , மகன் கைது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா (65). இவ அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று ஆண்கள் ஒரு பெண் இருந்த நிலையில் மூன்றாவதாக உள்ள மகன் கணேசன் என்பவர் அடிக்கடி குடிபோதையில் ரகலையில் ஈடுபட்டு வந்துள்ளாதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சொத்து பிரித்துக் கொடுப்பதில் தகராறு இருந்ததாக கூறப்படும் நிலையில் மகன் கணேசன் நேற்று வழக்கம்போல போதையில் ரகலையில் ஈடுபட்டதாககூறப்படுகிறது. நேற்று மாலை விவசாய வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த செல்லையாவிடம் கணேசன் ரகளையில் ஈடுபட்டு கையில் இருந்த அருவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்லையாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்லையாவை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மகன் கணேசனை குருவிகுளம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனே தந்தையை அறிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...