கோவை: விடாமல் கொட்டி தீர்க்கும் கன மழை-இன்றும் ரெட் அலர்ட் !

கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-05-26 03:06 GMT
கோவை மாவட்டத்திற்கு இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தின் கேரள எல்லைப் பகுதிகளான கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் சின்ன கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் 128 மில்லி மீட்டர், வால்பாறை பி.ஏ.பி பகுதியில் 114 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 109 மில்லி மீட்டர், வால்பாறை சின்கோனா பகுதியில் 124 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News