கோவை: மக்கள் அக்கறையில்லாத ஆட்சி திமுக - எடப்பாடி பழனிச்சாமி !

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது மக்கள் நலனில் அக்கறையின்மையையே காட்டுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.;

Update: 2025-05-26 07:14 GMT
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது மக்கள் நலனில் அக்கறையின்மையையே காட்டுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, தற்போது திடீரென பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மூன்று ஆண்டுகளாக கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால் தமிழகத்திற்கான நிதியையும், புதிய திட்டங்களையும், மாநிலம் சார்ந்த பிரச்சனைகளையும் தெரிவித்திருக்கலாம். ஆனால், மக்கள் மீது அக்கறையில்லாத முதலமைச்சராகவே ஸ்டாலின் செயல்படுகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வருவதன் பயத்திலேயே ஸ்டாலின் இக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது என்று பழனிச்சாமி தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்ட ஸ்டாலின், தற்போது ஆளும் கட்சியாக வந்த பிறகு பிரதமருக்கு வெள்ளை கொடி பிடித்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று பழனிச்சாமி விமர்சித்தார்.

Similar News