சாலை விபத்தில் மதுரை காவலர் பலி

மதுரை காவலரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது;

Update: 2025-05-26 07:29 GMT
மதுரை, ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40) மற்றும் அவரது மனைவி சங்கீதா(40) இருவரும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் நிலக்கோட்டையை அடுத்த குளத்துப்பட்டி தியாகராஜா மில் அருகே வந்து கொண்டிருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மதுரை சேர்ந்த காவலர் கணபதி உயிரிழந்தார். இவரது மனைவி சங்கீதா காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறந்த காவலரின் உடல் இன்று (மே.26) மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் மதுரை காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News