மத்திய நிதி அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்

மத்திய நிதி அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம் எழுதியுள்ளார்;

Update: 2025-05-26 07:30 GMT
தமிழக வங்கிகளில் நகை கடன் விதிமுறைகளை திரும்ப பெறுமாறு மத்திய நிதி அமைச்சருக்கு மதுரை எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார் . அதில் கூறியிருப்பதாவது. கடன் அளவு குறைப்பு, நகை அடகு வைத்தாலும் வருமானத் தகுதி நிபந்தனை, பயன்பாட்டுச் சான்று என்ற பெயரால் கடன்தாரர் உரிமை பறிப்பு, ஒவ்வொரு முறை கடனுக்கும் புதிய கடன் தகுதி பரிசீலனை எனக் கட்டணச் சுமை, நகை உடைமைச் சான்று எனப் போகாத ஊருக்கு வழி, தங்க நாணயங்களுக்கு நிபந்தனை, கடன் தொகை நிர்ணய முறைமையில் கடன் விகிதத்தில் குறைப்பு, கடனை திருப்பி கட்டினாலும் ஏழு நாள் கழித்து நகை என இழுத்தடிப்பு.எளிய மக்களை, சிறு வணிகர்களை கழுத்தைப் பிடித்து கந்துவட்டிக்காரர்களிடமும், நகை கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளுகிற ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு எழுதியுள்ளார்.

Similar News