கோவில் சிலைகளை உடைத்த மனநல பாதிக்கப்பட்ட நபர்
மதுரை திருமங்கலம் அருகே கோவில் சிலைகளை உடைத்த மனநல பாதிக்கப்பட்ட நபர் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குதிரைசாரி குளம் பழனியாபுரத்தில் ஏழு பேர் சாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு 10க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து விட்டு அங்கிருந்த மணி உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் அப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போது சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதி அஜித் (25,) என்பதும் இவர் மனநலம் பாதித்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் சுவாமி சிலைகளிடம் செலவுக்கு பணம் கேட்டதாகவும், தராததால், அவற்றின் கைகளை உடைத்ததாகவும் அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை திருமங்கலம் நகர் போலீசார் நேற்று (மே.25) ஆஸ்டின்பட்டி மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.