பீரோவை உடைத்து பத்து லட்சம் ரூபாய் பணம் கொள்ளை
மதுரை அலங்காநல்லூர் அருகே வீட்டிலிருந்து பீரோவை உடைத்து 10 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது;
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே முடுவார்பட்டியை சேர்ந்த பழனி( 69) என்ற ஓய்வு பெற்ற ஆட்சியர் அலுவலக உதவியாளர் நேற்று( மே.25) காலை தனது வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் சென்றுவிட்டு மீண்டும் மாலையில் திரும்பினார். இவர் வீட்டின் முன்பகுதியில் சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளார் . இந்த சாவியை எடுத்து திறந்த நபர் வீட்டில் நிலத்தை விற்று வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பீரோவை உடைத்து திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பாலமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.