கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி சிறுவன்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.;
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாமதம்பட்டியில் கூலித் தொழிலாளியாக உள்ள கார்த்திக்கின் மகன் ரித்திஷ் (8) என்பவர் போடிநாயக்கன்பட்டி பகுதி அரசு உதவிபெறும் பள்ளியில் 4ம் வகுப்பு படித்தார். நேற்று( மே.25) மாலை தனது தம்பி க்ரிஷ் (6) மற்றும் நண்பர்களுடன் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பின்புறம் உள்ள விவசாய கிணற்றில் குளித்த போது தவறி விழுந்து இறந்தார். வாடிப்பட்டி போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.