கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- விவசாயிகள் மகிழ்ச்சி!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கோவை குற்றாலம் நேற்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கோவை குற்றாலம் நேற்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவையின் முக்கிய நீராதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி தடுப்பணையில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட சித்திரை சாவடி தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அழகைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால், தொண்டாமுத்தூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.