புதிய ரேஷன் கடைகளை திறந்து வைத்த எம்எல்ஏ

மதுரை அண்ணாநகர் பகுதியில் புதிய ரேஷன் கடைகளை தொகுதி எம்எல்ஏ தளபதி அவர்கள் திறந்து வைத்தார்;

Update: 2025-05-26 11:15 GMT
மதுரை அண்ணாநகரில் புதியதாக கட்டப்பட்ட இரண்டு அரசு நியாய விலைக் கடைகளை, மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கோ. தளபதி திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி உறுப்பினர் ஜானகி சுரேஷ் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் சதிஷ் குமார், பாண்டியன் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் மனோகரன், பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் ஆசைத் தம்பி, மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, திமுக வட்டச் செயலாளர் சுரேஷ், திமுக நிர்வாகிகள் அறிவுநிதி, பிரேம், சுப்ரீம் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் கோ. தளபதி பேசியது: தமிழகத்தில், நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.ரேசன் கடைகளில் தரமான பொருட்களை, உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைக்க செய்வது அரசின் நோக்கமாகும் என்றார். கூட்டுறவு செயலாட்சியர் தீனத் தயாளன் நன்றி கூறினார்.

Similar News