வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
குமாரபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளி சாமான்கள் திருடப்பட்டது.;
குமாரபாளையம் கிழக்கு காவேரி நகரை சேர்ந்தவர் குருநாதன், 60. விசைத்தறி கூலி. இவரும், இவரது மனைவியும், மே. 17ல், உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பொள்ளாச்சி சென்று விட்டு நேற்றுமுன்தினம் காலை 07:00 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவின் லாக்கரும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், தோடு உள்ளிட்ட 5 கிராம் தங்க நகைகள், கால் செயின், அரைஞான் கயிறு உள்ளிட்ட 85 கிராம் வெள்ளி நகைகள் திருடப்பட்டிருந்தன. இதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாய். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய நபர் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.