ஜெயங்கொண்டத்தில் கறிக்கடைக்கு கறி வாங்க வந்தவரை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தவர் கைது.
ஜெயங்கொண்டத்தில் கறிக்கடைக்கு கரி வாங்க வந்தவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.;
அரியலூர் மே.26- ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவில் கரி வாங்க சென்ற வரை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல்(56) இவர் மேட்டு தெருவில் உள்ள கறிக்கடைக்கு சென்று கறி வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றபோது அவரை மரித்து கத்தியை காட்டி பையில் உள்ள பணத்தை கொடுக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன குமரவேல் சத்தம் போடவே கத்தியை காட்டி மிரட்டியவர் தப்பி ஓடி விட்டார் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் குமரவேல் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டிய இடையாறு கிராமத்தை மேலத்தெருவை சேர்ந்த மருதகாசி மகன் மாரிமுத்து(28) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் மாரிமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.